புதுடெல்லி,டிச.6:'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற முழக்கத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அளவிலான தீவிர பிரச்சாரம் இன்று டெல்லியில் துவங்குகிறது.
பாப்ரி மஸ்ஜிதை இடித்ததைக் குறித்து விசாரணையை மேற்கொண்ட லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசின் போக்கை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் முன்னுறூக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று தர்ணாவில் ஈடுபடுவர்.
ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியதின் நினைவு தினமான இன்று(டிசம்பர்-6) துவங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் இதே ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கரங்களால் கொலைச் செய்யப்பட்ட இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் இரத்த சாட்சி தினமான ஜனவரி 30 ஆம் தேதி முடிவடையும்.
'பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவோம்! மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்' என்ற முழக்கத்துடன் டிசம்பர் 10 ஆம் தேதி தீவிரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படும்.
பாப்ரிமஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில்தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்கிறது.
மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டி பிரச்சாரம், ஆவணப்பட வீடியோ காட்சிகள் விநியோகம், கண்டன பேரணிகள், தர்ணாக்கள் ஆகியன இப்பிரச்சார வேளையில் நடத்தப்படும். இன்று காலை 11 மணிக்கு ஜந்தர் மந்தரில் துவங்கும் தர்ணா மதியம் 2 மணிக்கு முடிவடையும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சமூக-மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆகியோர் தர்ணாவில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்துவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான தீவிர பிரச்சாரம் இன்று துவங்குகிறது"
கருத்துரையிடுக