23 டிச., 2010

விக்கிலீக்ஸ்:பங்களாதேசின் 'மரணப்படைக்கு' பிரிட்டன் பயிற்சி அளித்துள்ளது

லண்டன்,டிச.23:மனித உரிமை அமைப்புகளால் 'அரசு மரணப்படை' என அழைக்கப்படும் பங்களாதேஷ் துணை ராணுவப்படைப் பிரிவுக்கு பயிற்சி அளித்தது பிரிட்டன் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் காணப்படுகிறது.

ரேபிட் ஆக்‌ஷன் பட்டாலியன்(ஆர்.எ.பி) என்றழைக்கப்படும் இப்படையினர் சமீபகாலங்களில் சட்டவிரோத கொலைகளை நிகழ்த்தியிருந்தனர்.

சித்திரவதைகளை கையாளும் இந்த படையினருக்கு விசாரணை முறைகளையும், மோதல் ரீதிகளையும் பயிற்சி அளித்தது பிரிட்டனாகும் என்ற செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பங்களாதேஷ் தீவிரவாத எதிர்ப்பு திட்டங்கள் குறித்த தூதரக செய்தியில் இச்சம்பவம் காணப்படுகிறது.

ஆர்.எ.பி என்ற மரணப்படையை உருவாக்கிய பிறகு ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத கொலைகள் பங்களாதேஷில் நடந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டின்போது சிக்கி இறந்ததாக ஆர்.எ.பி கூறுகிறது. கடந்த ஆண்டு 577 பேர் இந்த ரீதியில் கொல்லப்பட்டதாக ஆர்.எ.பி இயக்குநர் ஜெனரல் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த ஆண்டு ஆர்.எ.பியினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 522 ஆகும்.

ஆர்.எ.பியின் சித்திரவதைகளைக் குறித்து மனித உரிமை அமைப்புகள் வெளிப்படுத்தியிருந்தனர். கடத்திச் செல்லல், வழிப்பறி ஆகியவற்றுடன் பணத்தை வாங்கி ஆட்களை கொல்வதையும் ஆர்.எ.பி நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேவேளையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்துவதன் பெயரில் அமெரிக்காவும், பிரிட்டனும் கண்ணை மூடிக்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்ட தூதரக செய்தி கூறுகிறது.

டாக்காவின் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் மோரியார்டி ஆர்.எ.பி ஒருநாள் அமெரிக்காவின் எஃப்.பி.ஐயாக மாறும் என புகழாரம் சூட்டுகிறார். மற்றொரு செய்தியில் ஆர்.எ.பிக்கு 18 மாத பயிற்சியை பிரிட்டன் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆர்.எ.பி அரசு மரணப்படை என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், பங்களாதேஷ் மனித உரிமை அமைப்புமான ஒடிகாரும் ஆர்.எ.பிக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்திருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:பங்களாதேசின் 'மரணப்படைக்கு' பிரிட்டன் பயிற்சி அளித்துள்ளது"

கருத்துரையிடுக