15 டிச., 2010

ஃபலஸ்தீன் நாட்டை பொருத்தமான காலக்கட்டத்தில் அங்கீகரிப்போம் - ஐரோப்பிய யூனியன்

பிரஸ்ஸல்ஸ்,டிச.15:ஃபலஸ்தீன் நாட்டை பொருத்தமான காலக்கட்டத்தில் அங்கீகரிப்போம் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

1967 ஆம் ஆண்டின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய ஃபலஸ்தீன் அரசை அங்கீகரிக்க வேண்டும் என ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இவ்வறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

1967 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் மேற்குகரையும், காஸ்ஸாவும் இஸ்ரேல் கைப்பற்றிய பொழுதிலும் 2005 ஆம் ஆண்டு காஸ்ஸாவிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கியது. யூத குடியேற்ற நிர்மாணத்தை முடக்குவதற்கான மொரிட்டோரியத்தின் கால அவகாசத்தை நீட்டுவதில் இஸ்ரேலை தோல்வியைத் தழுவியுள்ளது கவலைக்குரியதாகும்.

குடியேற்ற நிர்மாணம் அமைதிக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதாகும் என ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் குழு தெரிவித்துள்ளது.

ஃபலஸ்தீனை பிரேசிலும், அர்ஜெண்டினாவும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக கடந்த வாரம் பிரகடனப்படுத்தியிருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் நாட்டை பொருத்தமான காலக்கட்டத்தில் அங்கீகரிப்போம் - ஐரோப்பிய யூனியன்"

கருத்துரையிடுக