ராமல்லா,டிச.9:ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்வதை முடிவுக்கு கொண்டுவராததினால் மேற்காசிய அமைதி பேச்சுவார்த்தை நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணத்தை தடுப்பதில் தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்துதான் மஹ்மூத் அப்பாஸின் பதில் வெளியாகியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை நெருக்கடியில் சிக்கியுள்ளதில் சந்தேகமில்லை என ஏதென்சிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
10 மாத குடியேற்ற நிர்மாணத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் மெரிட்டோரியத்திற்கு பிறகும் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்ந்ததால் நேரடியான பேச்சுவார்த்தையிலிருந்து அப்பாஸ் பின்வாங்கியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமைதிப் பேச்சுவார்த்தை நெருக்கடியில்: மஹ்மூத் அப்பாஸ்"
கருத்துரையிடுக