9 டிச., 2010

ஹிஜ்ரி புத்தாண்டு - துயருறும் சமூகம்; துயிலுறும் சமூகம்

புலம் பெயர்வில் கருக்கொண்டது
புத்தாண்டு
கொள்கையின் பால்
கொள்ளைக் கொண்ட உள்ளங்கள்
கொடுமைகளை தாங்கி
வடுக்களை சுமந்து
வதங்கி நின்றபொழுது
வல்லோனின் உத்தரவால்
வாழ்விடத்தை
துறந்திட நபிகளார்
துணிந்தார்கள்

உறவுகளின் பிரிவால்
வரலாறு வரம் பெற்றது
சங்கமித்த சொந்தங்களால்
சகாப்தம் உருவானது

இஸ்லாத்தின் ஆட்சியால்
இவ்வையகம் மாட்சிமைப் பெற்றது

இன்று...
ஹஜ்ரத்துகளின் பயான்களில்
ஹிஜ்ரத்தின் பலா பலன்கள்
கதாகாலட்சேபமானது
சகோதரத்துவ உணர்வுகள்
விரிசல்களால் விரயமாகிறது

துயருறும் சமூகம் ஒருபுறம்
துயிலுறும் சமூகம் மறுபுறம்

இருப்பதை இழப்பதற்கு தயாரில்லை
வருவதை தடுப்பதற்கும் தயாரிப்பில்லை
இன்றைக்கும் உண்டுமா ஹிஜ்ரத்?
எங்கேயோ கேட்டது ஒரு குரல்

-ஆயிஷாமைந்தன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஜ்ரி புத்தாண்டு - துயருறும் சமூகம்; துயிலுறும் சமூகம்"

கருத்துரையிடுக