காபூல்,டிச.9:தெற்கு ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் 10 அமெரிக்க ராணுவத்தினரை கொலைச் செய்ததாக தாலிபான் அறிவித்துள்ளது.
மெய்வாந்த் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மாலையில் இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. ஆங்கிலம் பேசும் 12 வயது தாலிபான் போராளி இத்தாக்குதலை நடத்தியதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.
ஆனால் இத்தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படவில்லை என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
காந்தஹாரில் தாலிபான் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக நேட்டோ தெரிவிக்கிறது. தாக்குதல் நடந்த இடம் குறித்து தெரியவில்லை.
ஆப்கானை அந்நிய நாட்டு படையினர் ஆக்கிரமித்த பிறகு பெரும் இழப்பை சந்தித்த ஆண்டு 2010 ஆகும். 682 அந்நிய ராணுவத்தினர் இவ்வாண்டு கொல்லப்பட்டுள்ளனர். காந்தஹாரிலிருந்து தாலிபான்களை துரத்துவதற்காக அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்பு கூடுதல் ராணுவத்தினரை அனுப்பியிருந்தது.
ராணுவத்தினரும், சிவிலியன்களும் கொல்லப்படுவது பெருமளவில் அதிகரித்திருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவித்திருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கான்:10 அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றனர் தாலிபான்கள்"
கருத்துரையிடுக