புதுடெல்லி,ஜன.22:தெற்கு டெல்லியில் ஜங்புராவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் இடித்துத் தள்ளப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் தொழுகை நடத்த 10 பேருக்கு மட்டுமே அனுமதியுண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பத்திற்கும் மேற்பட்டவர்களை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி நூர் சாரிட்டபிள் சொசைட்டி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.எஸ்.சிஸ்தானி தள்ளுபடிச் செய்தார்.
தற்காலிகமாக 10 பேருக்கு 10 மாதத்திற்கு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. இம்மாதம் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டெல்லி:மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் 10 பேருக்கு மட்டுமே தொழுகை நடத்த அனுமதி - டெல்லி உயர்நீதிமன்றம்"
கருத்துரையிடுக