22 ஜன., 2011

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரிசோதிக்கிறது

புதுடெல்லி,ஜன.22:இஸ்லாமிய மார்க்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் மத மாறிய தலித்துகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட(எஸ்.சி) ஜாதியினரின் இடஒதுக்கீடு சலுகைகளை அளிக்கலாமா என்பதுக் குறித்து பரிசோதிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதுத் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆறு வருடங்களுக்கு பிறகு இதனை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதனைக் குறித்து எஸ்.சி தேசிய கமிஷன் மற்றும் மத-மொழி சிறுபான்மை தேசிய கமிஷனிடமும் நீதிமன்றம் அபிப்ராயம் கேட்டுள்ளது.

இதுத் தொடர்பாக வந்த மனுக்களில் முக்கியமான அரசியல் சட்டம் தொடர்பான விஷயங்கள் எழுவதாக உச்சநீதிமன்றம் கண்டது.

ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் வழங்குவதை ஆதரித்தும், எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதி கெ.எஸ்.ராதாகிருஷ்ணன, சுதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மூத்த வழக்கறிஞரான டி.ஆர்.ஆந்திருசினாவிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

1950 ஆம் ஆண்டு சட்டம் ஹிந்து, புத்த, சீக்கிய மதச் சடங்குகளை பேணாதவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சலுகைகளை வழங்கக்கூடாது எனக் கூறினாலும் இது அரசியல் சட்டத்தின் 14,15,19,25 பிரிவுகளுக்கு எதிரானதா? என உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும் முக்கிய கேள்வி.

இந்த மூன்று மத பிரிவில் உட்படாத அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு இடஒதுக்கீடு சலுகைகளை வழங்கலாமா? என்பது இரண்டாவது கேள்வி.

இதர மதத்தைச் சார்ந்த அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றோருக்கு இடஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டியதில்லை என்ற 1950ஆம் ஆண்டு அரசியல் சட்டவிதி செல்லுபடியாகுமா? என்பது மூன்றாவது கேள்வியாகும்.

1950 ஆண்டு அரசியல் சட்டவிதியின் படி 25 மாநிலங்களில் 1108 அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடைசியாக இம்மனுக்களை பரிசீலனைக்கு எடுத்தபொழுது உணர்ச்சிப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை மேல்மட்ட பெஞ்சின் பரிசீலனைக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

தகுதியுடையவர்கள் இடஒதுக்கீடு சலுகையை அனுபவிப்பதிலிருந்து புறக்கணிக்கப்படாமலிருக்க ஜாதி என்ற வார்த்தையின் எதிர்பதம் அரசியல் சட்டத்தின் 16(4), 15(4) ஆகிய பிரிவுகளின்படி பரிசோதிக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இவ்விஷயத்தை பொதுசமூகத்திற்கு அறிவிப்பதற்காக உச்சநீதிமன்ற இணையதளத்திலும் வெளியிட பெஞ்ச் தீர்மானித்துள்ளது.

ஹிந்து, சீக்கிய மதப் பிரிவினர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டின் சலுகைகளை வழஙகலாமென்றால் இதர மதத்திற்கு மாறுபவர்களுக்கு இச்சலுகைகளை வழங்காதிருக்க காரணமொன்றுமில்லை என செண்டர் ஃபார் பப்ளிக் இண்டரஸ்ட் லிட்டிகேசனுக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்திற்கு உணர்த்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரிசோதிக்கிறது"

கருத்துரையிடுக