11 ஜன., 2011

ஈரான்:மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை

டெஹ்ரான்,ஜன.11:ஈரானில் மனித உரிமை பெண் வழக்கறிஞர் நஸ்ரின் ஸொடூதேவுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நஸ்ரினினுடைய கணவர் ரிஸா காந்தான் இதனை தெரிவித்துள்ளார்.

20 வருடங்கள் நஸ்ரின் பணியில் ஈடுபடுவதையும், நாட்டை விட்டு வெளியேறுவதையும் நீதிமன்றம் தடைச் செய்துள்ளது. இது கடுமையான நீதிமறுப்பாகும் என நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இண்டர்நேசனல் கேம்பெய்ன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இன் ஈரான்(ஐ.சி.ஹெச்.ஆர்.எ) கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கெதிராக செயல்பட்டார், அரசுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டது, ஈரானின் நோபல் பரிசு பெற்ற ஷெரின் இபாதியின் ஹியூமன் ரைட்ஸ் டிஃபண்டேர்ஸ் செண்டரில் உறுப்பினர் ஆகிய குற்றங்கள் நஸ்ரின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டதன் பேரில் சிறையிலடைக்கப்பட்ட தனது கட்சிதாரர்களைக் குறித்து வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டிதான் முக்கியமாக நஸ்ரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரான்:மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை"

கருத்துரையிடுக