11 ஜன., 2011

இனக்கலவரம்:அஸ்ஸாமில் கண்டால் சுட உத்தரவு

ஷில்லாங்,ஜன.11:இனக்கலவரம் நிகழ்ந்ததையொட்டி ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எல்லைப் பகுதியில் கண்டால் சுடும் உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அஸ்ஸாம்-மேகாலயா எல்லை பிரதேசங்களான கோல்பரா-கிழக்கு காரா குன்றுகள் ஆகிய இடங்களில் நிகழ்ந்த கலவரத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

திஸ்பூரில் நடந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்திற்கு பிறகு இந்த உத்தரவை மாநில உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கோல்பரா துணை கமிஷனர் பி.கே.கோஷ்வாமி தெரிவித்தார்.

காரோஸில் சிகிஸம், கல்டாங், காஸிக்காரா ஆகிய கிராமங்கள் நேற்று முன் தினம் தாக்குதலுக்கு ஆளாகின. பெண்களும், குழந்தைகளும் உள்பட 200 பேர் இக்கிராமங்களிலிருந்து தப்பிச் சென்று ஒரு ப்ரைமரி ஸ்கூலில் தஞ்சம் புகுந்தனர். இவர்களை பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையிலுள்ள அகதிகள் முகாமிற்கு மாற்றியதாக போலீஸ் அறிவித்துள்ளது.

அஸ்ஸாம்-மேகாலாயா எல்லையில் கடந்த 10 தினங்களாக ரபா மற்றும் கரோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனக்கலவரம்:அஸ்ஸாமில் கண்டால் சுட உத்தரவு"

கருத்துரையிடுக