25 ஜன., 2011

கோத்ரா ரெயில் எரிப்பு:௦ அடுத்த மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு

அஹ்மதாபாத்,ஜன.25: 58 பேருடைய மரணத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அடுத்தமாதம் 19-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.

இந்த ரயில் எரிப்புச் சம்பவத்தில் 58 பயணிகள் உயிரிழந்தனர். குஜராத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா எனுமிடம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பயணிகள் உயிரிழந்தனர். இந்த ரெயில் எரிப்புக்கு முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டி ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்து கோரதாண்டவமாடினர்.

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு தொடர்பான இரு தரப்பு வாதங்களையும் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே கேட்டு முடித்துவிட்டார் நீதிபதி பி.ஆர்.படேல். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜே.எம்.பாஞ்சால் தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்த தடை அக்டோபர் 26-ம் தேதி விலக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் சபர்மதி சிறையில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 2002-ம் ஆண்டு 94 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அனைவர் மீதும் கொலைக்குற்றம் மற்றும் சதித்திட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு குற்றஞ்சாட்டப்பட்டோரை பொடா சட்டத்தின் கீழ் கைதுச்செய்ய கோரியபொழுது பொடா மறுஆய்வு கமிட்டி இதனை தடைச்செய்தது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் இச்சம்பவம் விபத்து இல்லை எனவும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்டது எனக்கூறியது. கோத்ரா ரெயில் எரிப்பில் முதல்வர் மோடி, இதர அமைச்சர்கள், போலீசார் ஆகியோருக்கு பங்கில்லை எனவும் தெரிவித்தது.

ஆனால், மத்திய ரெயில்வேதுறையால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷன் தனது அறிக்கையில், கோத்ரா ரெயிலில் எரிபொருள் உள்ளேயிருந்து பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இக்கமிஷன் அறிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் வெளியிட தடைவிதித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோத்ரா ரெயில் எரிப்பு:௦ அடுத்த மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு"

கருத்துரையிடுக