பாக்தாத்,ஜன.25:ஈராக் நாட்டில் ஷியாக்களின் புண்ணிய நகரான கர்பலாவில் நடந்த இரட்டைப் படுகொலையில் 25 புனித யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
அல் இப்ராஹீமில் புனித யாத்ரீகர்களை ஏற்றிவந்த பஸ் நிறுத்தப்பட்டிருந்த டெர்மினலில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 18 பேருக்கு காயமேற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணிநேரங்களில் நகரின் தெற்குபகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 50 பேருக்கு காயமேற்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் தலைநகரான பாக்தாதில் கண்ணி வெடித்தாக்குதலில் ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியும், ஓட்டுநரும் கொல்லப்பட்டனர். பின்னர் நடந்த குண்டுவெடிப்பில் எட்டு யாத்ரீகர்கள் படுகாயமடைந்தனர்.
இமாம் ஹுஸைனின் உயிர் தியாகம் நிகழ்ந்து 40-வது நாளை அனுஷ்டிக்கும் நிகழ்ச்சியில் 10 லட்சம் புனித பயணிகள் ஒன்றுகூடும் வேளையில்தான் கர்பலாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நெரிசல் காரணமாக கர்பலாவில் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்தவாரம் நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகளில் 156 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கர்பலாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 25 புனித யாத்ரீகர்கள் படுகொலை"
கருத்துரையிடுக