மாஸ்கோ,ஜன.25:ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் டோமோதேடோவோ சர்வதேச விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். 130 பேருக்கு காயமேற்பட்டதாக கருதப்படுகிறது.
உடலில் குண்டை கட்டிக்கொண்டு வந்த நபர் நெரிசல் மிகுந்த விமானநிலையத்தில் வைத்து சுயமாக குண்டை வெடிக்க வைத்தார் என ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.எ நொவோஸ்தி கூறுகிறது.
மாஸ்கோ நகரத்திலிருந்து 40.கிலோமீட்டர் தொலைவில் டோமோதேடோவோ விமானநிலையம் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாஸ்கோ மெட்ரோ ரெயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 80க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. 2 பெண்கள் அத்தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மாஸ்கோ விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம்"
கருத்துரையிடுக