2 ஜன., 2011

எகிப்து:சர்ச்சில் குண்டுவெடிப்பு - 21 பேர் மரணம்

கெய்ரோ,ஜன.2:எகிப்து நாட்டில் அமைந்துள்ள கிறிஸ்தவ சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் மரணமடைந்தனர்.

சர்ச்சிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்குண்டு வெடித்தது என முதலில் கூறப்பட்டது, பின்னர் உடலில் குண்டை கட்டிவந்தவர் வெடித்து சிதறியதாக எகிப்து நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இக்குண்டுவெடிப்பில் 43 பேர்களுக்கு காயமேற்பட்டது.

காப்டிக் கிறிஸ்தவர்கள் புத்தாண்டையொட்டி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வெளியே வரும்பொழுதுதான் குண்டு வெடித்தது. இச்சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காப்டிக் கிறிஸ்தவர்கள் அருகிலிருந்த முஸ்லிம் மஸ்ஜிதின் மீது கல்வீசித் தாக்கினர். பின்னர் வெறிபிடித்த சிலர் மஸ்ஜிதிலிருந்த குர்ஆன் பிரதிகள், சில புத்தகங்களை வெளியில் வீசினர்.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே மோதல் நடைப்பெற்றது. குண்டுவெடிப்பில் மஸ்ஜிதும் சேதமடைந்துள்ளது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

குண்டுவெடிப்பில் 7 முஸ்லிம்களும் காயமடைந்துள்ளதாக சுகாதா அமைச்சகம் அறிவித்துள்ளது.

அல் அஸ்ஹர் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரிஃபா அல் தஹ்தாவி இத்தாக்குதலை கண்டித்துள்ளார். எகிப்தின் ஐக்கியத்தை தகர்ப்பதற்கான முயற்சி இது எனவும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பொறுமை காக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எகிப்தின் மக்கள் தொகையில் காப்டிக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாகும். சர்ச்சுகள் நிர்பந்த மதமாற்றத்தில் ஈடுபடுவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், நாங்கள் எகிப்தில் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:சர்ச்சில் குண்டுவெடிப்பு - 21 பேர் மரணம்"

கருத்துரையிடுக