ஜெருசலம்,ஜன.2:கடந்த மாதம் இந்தியாவிலிருந்து புறப்பட்ட காஸ்ஸா நிவாரண கப்பலுக்கு அல் அரீஷ் துறைமுகத்தில் நங்கூரமிடவும், ரஃபா எல்லை வழியாக காஸ்ஸாவிற்குள் நுழையவும் எகிப்து அனுமதியளித்துள்ளது.
120 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் எம்.பி காலித் அப்துல் மாஜிதை மேற்கோள்காட்டி அல் அஹ்ராம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 45 பேர்களுக்கு எகிப்து அனுமதி மறுத்தது. ஈரான் வழங்கிய 10 ஜெனரேட்டர்கள் உள்பட சில சரக்குகளை காஸ்ஸாவிற்கு கொண்டுச் செல்லவும் எகிப்து அனுமதி மறுத்தது.
'ஏசியா டு காஸ்ஸா காரவான்' என்ற நிவாரணக் குழுவில் இந்தியா, ஈரான், ஜப்பான், இந்தோனேஷியா, பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்பட 15 ஆசிய நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர்.
டிசம்பர் 27 ஆம் தேதி காஸ்ஸாவிற்குள் நுழைய ஏற்கனவே இக்குழு திட்டமிட்டிருந்தது. புதுடெல்லியிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி புறப்பட்ட இக்குழு தற்பொழுது சிரியாவில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்தியாவிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பலுக்கு காஸ்ஸாவில் நுழைய அனுமதி"
கருத்துரையிடுக