15 ஜன., 2011

பேராசிரியர் கைவெட்டு சம்பவம்: 27 பேர் மீது குற்றப்பத்திரிகை

கொச்சி,ஜன.15:நபி(ஸல்..) அவர்களை அவமதித்து வினாத்தாள் தயாரித்த தொடுபுழா நியூமென் கல்லூரி பேராசிரியர் டி.ஜெ.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில் 27 பேர் மீது குற்றம் சுமத்தி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 54 பேர்களில் மீதமுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளதால் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத செயல் தடுப்புச்சட்டம், குற்றம் நிகழ்த்துவதற்கான சதித்திட்டம், கொலை முயற்சி, கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், வெடிப்பொருள் சட்டம், சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவது உள்பட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் 255 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 200 முதல் 255 வரையிலான சாட்சிகள் போலீஸ்காரர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "பேராசிரியர் கைவெட்டு சம்பவம்: 27 பேர் மீது குற்றப்பத்திரிகை"

Unknown சொன்னது…

மத அவமதிப்புக்காக அந்த அயோக்கியன் மீது நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் / கலவரங்களை உண்டு பண்ணும் எண்ணத்தோடு மத துவேசத்தில் இதை அவன் செய்து உள்ளான். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கதையாக ஒரு சார்பாக இருக்கக் கூடாது / காவல் துறை உண்மை சாட்சிகளாக இருக்க அவர்கள் அக்மார்க் மற்றும் ISI முத்திரைகள் பெற வேண்டும் .. ஏனென்றால் காவல் துறையின் இலச்சினத்தை மக்கள் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள்

Unknown சொன்னது…

கல்லூரி பேராசிரியராக இருந்து கொண்டு மததுவேசத்தில் இவ்வாறான வினாத்தாளை கேள்விகளை வெளி இட்டது / இந்திய சமூகத்தில் எவ்வளவு பின் விளைவுகளை எஅர்ப் படித்தும் என்ற இந்தியனுக்கு உண்டான சுய உணர்வு இல்லாமல் கேள்விகளை தயாரித்த அயோக்கியனும் தண்டிக்கப் படவேண்டும் / கை வெட்டு சம்பவத்திற்கு மத துவேசமான கேள்வித் தாலே காரணமாகும்/ சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டிய ஆசிரியர் பணியை செய்து கொண்டு இத்தகைய சமூக விரோதமான கேள்வித்தாளை தயாரித்தவனை முதலில் தண்டிக்க வேண்டும்/

Mohamed Ismail MZ சொன்னது…

@ Raja ரொம்ப கவனமா இருங்க! ஏன்னா, நீங்க எழுதுர கமாண்ட பார்த்து உங்களயும் கைது செய்யப்போராங்க!

கருத்துரையிடுக