அஹ்மதாபாத்,ஜன.15:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கு சிறப்பு புலானாய்வுக் குழுவிற்கு(எஸ்.ஐ.டி) குழு மனப்பான்மை உள்ளதா? என்ற சந்தேகத்தை குஜராத் உயர்நீதிமன்றம் கிளப்பியுள்ளது.
வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கான சட்ட வல்லுநரை நியமிப்பதுத் தொடர்பாக எஸ்.ஐ.டி வேறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட எஸ்.ஐ.டியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளினால் நீதிமன்றத்தின் புனிதத் தன்மைக்கு கேடுவராமலிருக்க எஸ்.ஐ.டியின் செயல்பாடுகள் குறித்த மாதிரி ஆவணம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலைவழக்கை விசாரிக்கும் பொறுப்பை குஜராத் உயர்நீதிமன்றம் எஸ்.ஐ.டியிடம் ஒப்படைத்தது.
எஸ்.ஐ.டி தலைவர் கர்னால் சிங்கின் அணுகுமுறையை கண்டித்து மற்றொரு உறுப்பினரான சதீஷ்வர்மா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சத்திய வாக்குமூலம் அளித்திருந்தார். எஸ்.ஐ.டியின் இன்னொரு உறுப்பினர் மோகன் ஜா ஆவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஷ்ரத் ஜஹான்:எஸ்.ஐ.டி மீது நீதிமன்றத்திற்கு சந்தேகம்"
கருத்துரையிடுக