வாஷிங்டன்,ஜன.6:அமெரிக்காவின் நீதிபீடத்தின் வீழ்ச்சி மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
நிரபராதியான டெக்ஸாஸ் மாகாணத்தைச் சார்ந்த நபர் ஒருவரை 30 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்துள்ளது.
கோர்ணேலியஸ் ட்ரூபி ஜூனியர் என்ற 52 வயது நபர் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியுலகை காண்கிறார்.
1979 ஆம் ஆண்டு 26 வயதான பெண்மணியொருவரின் பொருளைக் கொள்ளையடித்து அவரை பாலியல் வன்புணர்வுச் செய்த வழக்கில் ட்ரூபியும் இன்னொரு நபரும் கைதுச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு ட்ரூபியும் குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொரு நபரையும் புகைப்படம் மூலம் அடையாளங்கண்டார் அப்பெண்மணி.
ஒரு வருடத்திற்கு ஆப்ரிக்க-அமெரிக்கக்காரரான ட்ரூபி ஆயுதக் கொள்ளைத் தொடர்பாக நீதிமன்றம் 75 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. ஆனால், பாலியல் வன்புணர்வு வழக்கில் விசாரணை கூட நடக்கவில்லை.
கைதுச் செய்யப்பட்ட நாள் முதலே தான் நிரபராதி என்பதை நிரூபிக்க ட்ரூபி முயன்று வருகிறார். மூன்று முறை உயர்நீதிமன்றம் அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடிச் செய்தது. இறுதியாக கடந்த வாரம் நடத்திய டி.என்.ஏ பரிசோதனையில் ட்ரூபி நிரபராதி என நிரூபிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "30 ஆண்டுகால சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர் என விடுதலைச் செய்த அமெரிக்க நீதிமன்றம்"
கருத்துரையிடுக