திக்ரித்,ஜன.19:ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் சொந்த ஊரான திக்ரித்தில் போலீஸ் தேர்வு மையத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாகினர். பெல்ட் வெடிக்குண்டுடன் வந்த நபர் குண்டை வெடிக்கச்செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
போலீஸில் சேர்வதற்காக ஆட்கள் வரிசையில் நிற்கும்பொழுது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஸலாஹுத்தீன் மாகாண கவர்னர் அஹ்மத் அப்துல் ஜப்பார் தெரிவிக்கிறார்.
மரண எண்ணிக்கையைக் குறித்து மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. 42 பேர் கொல்லப்பட்டதாக அப்துல் ஜப்பார் கூறுகிறார். 45 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால், ஈராக் உள்துறை அமைச்சகம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளன என தெரிவிப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய மருத்துவமனையில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு நிகழும்பொழுது 300க்கும் அதிகமானோர் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். திக்ரித் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஈராக்கில் தாக்குதல்கள் குறைந்திருந்தன. ஆனால், திக்ரித்தில் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறுவதுண்டு.
ஈராக் போலீசாரிடம் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அந்நிய ஆக்கிரமிப்புபடையினர் ஈராக்கை விட்டு வெளியேற இருப்பதால் தீவிரமான போலீஸில் ஆட்களை சேர்க்கும் பணி ஈராக்கில் நடந்துவருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்:குண்டுவெடிப்பில் 50 பேர் பலி"
கருத்துரையிடுக