19 ஜன., 2011

காஸ்ஸாவில் கடந்த ஆண்டு 26 ஃபலஸ்தீன் சிறுவர்களை கொலைச்செய்துள்ள இஸ்ரேல்

காஸ்ஸா,ஜன.19:காஸ்ஸாவில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் 26 ஃபலஸ்தீன் குழந்தைகளை கொன்றுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

எல்லைப் பகுதிகளில் தகர்ந்துபோன கட்டிட சிதிலங்களிடையே பொருட்களைத் தேடிக்கொண்டிருந்த சிறுவர்களை கொடூரமாக இஸ்ரேலிய ராணுவம் கொலைச் செய்துள்ளது.

'சேவ் சில்ட்ரன்' என்ற குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு தயாராக்கிய அறிக்கையில் இதுத்தொடர்பாக தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு 29 நாட்கள் நீண்ட இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்துவிழுந்த கட்டிட சிதிலங்களிடையே ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா? என தேடிக்கொண்டிருந்த சிறுவர்களைத்தான் இஸ்ரேல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது.

மேலும் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் சிறுவர்களின் வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலின் தடையால் பணிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. படிப்பை பாதியில் கைவிட இது காரணமானது. இதனை சுட்டிக்காட்டி யூனிசெஃபின் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்பு விரைவில் தடையை இஸ்ரேல் நீக்கவேண்டும் என கோரியுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் கடந்த ஆண்டு 26 ஃபலஸ்தீன் சிறுவர்களை கொலைச்செய்துள்ள இஸ்ரேல்"

கருத்துரையிடுக