துனீஸ்,ஜன.19: 450 லட்சம் யூரோ மதிப்புடைய தங்கத்துடன் துனீசியாவின் முன்னாள் அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
பிரான்சு உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் முக்கிய பத்திரிகையான லெமோந்தே இதுத் தொடர்பான செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
ஆட்சி கவிழும் முன்பு பின் அலியின் மனைவியான லைலா ட்ராபெல்ஸி தங்கத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார் என அச்செய்தி கூறுகிறது.
மக்கள் புரட்சியைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை துனீசியாவில் 23 ஆண்டுகால பின் அலியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. தங்கத்தை எடுப்பதற்காக பின் அலியின் லைலா பாங்க் ஆஃப் துனீசியாவுக்கு சென்றுள்ளார். பின்னர் துபாய்க்கு சென்றுவிட்டு சவூதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜித்தாவுக்கு சென்றதாக அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி கூறுகிறது. பல நாட்கள் லைலா துபாயில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பின் அலியும் குடும்பத்தினரும் ஒன்றரை டன் தங்கத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்"
கருத்துரையிடுக