19 ஜன., 2011

மொகாதிஷுவில் மோதல்:32 பேர் மரணம்

மொகாதிஷு,ஜன.19:சுதந்திரத்திற்காக போராடும் போராளிகளுக்கும் ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தினருக்குமிடையே சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷுவில் நடந்த மோதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.

கடந்த திங்கள் கிழமை சோமாலியா பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து போராளிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையேயான மோதல் வலுத்துள்ளது.

நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சந்தையில் நடந்த தாக்குதலில் 20 கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் நபர் ஒருவர் கூறுகிறார்.

போராளிகள் ராணுவ மையமாக பயன்படுத்தும் மத்திய மொகாதிஷுவின் பகரா மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சிவிலியன்கள் வாழும் பகுதிகளில் நடந்த தாக்குதலில்தான் அதிகமான நபர்களுக்கு காயமேற்பட்டதாக அதிகாரியொருவர் கூறுகிறார்.

சோமாலியாவின் தெரோதொரோ கிராமத்தில் பட்டினியால் 8 குழந்தைகள் மரணித்ததாக அக்கிராமத்தின் முதியவர் ஹஸன் ஹாஜி கூறியுள்ளார். ஐ.நாவின் உதவியை கோரியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

சோமாலியாவின் முன்னாள் சர்வாதிகாரி முஹம்மது ஸியாத் பாரே 1991 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு சோமாலியாவில் செயல்படக்கூடிய அரசு இதுவரை உருவாகவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கிடையே பல்வேறு பிரிவினர்களுக்கிடையே நடந்த மோதலிலும், பட்டினியாலும் 10 லட்சம் பேரின் உயிர் பறிபோனது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மொகாதிஷுவில் மோதல்:32 பேர் மரணம்"

கருத்துரையிடுக