19 ஜன., 2011

லெபனான்:அமெரிக்கத் தூதரை அழைத்து கண்டனம்

பெய்ரூத்,ஜன.19:பெய்ரூத்தில் அமெரிக்க தூதர் மவ்ரா கொன்னெலியை லெபனான வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறத்தான் அமெரிக்க தூதரை அழைத்ததாக கூறப்படுகிறது.

நிக்கோலஸ் ஃபத்தூஷ் என்ற மக்கள் பிரதிநிதி ஒருவரை சந்தித்ததற்கான காரணத்தை விளக்க லெபனானின் வெளியுறவுத்துறை விவகார அமைச்சர் அலி ஷாமி கொன்னெலியிடம் கோரியதாக பிரஸ்டிவி கூறுகிறது.

இத்தகைய தொடர்புகள், லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என லெபனானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியை கொலைச்செய்த வழக்கை விசாரிக்கும் ஐ.நா தீர்ப்பாயம் தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ் லெபனான் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து ஸஅத் ஹரீரியின் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் லெபனானில் நிலவும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்வது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஐ.நா தீர்ப்பாயத்தின் குற்றப்பத்திரிகை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலேயே அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லெபனான்:அமெரிக்கத் தூதரை அழைத்து கண்டனம்"

கருத்துரையிடுக