19 ஜன., 2011

இளையான்குடியில் கல்வியின் மகத்துவத்தை விளக்கும் விதமாக நடைபெற்ற கல்வித் திருவிழா

இளையான்குடி,ஜன.19:சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 'தி இளையான்குடி முஸ்லிம் எஜுகேசனல் டிரஸ்ட்' (TIME TRUST) சார்பாக ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் 'வளரும் சமுதாயத்தை வல்லமைமிக்க சமுதாயமாக மாற்ற அடிப்படைத் தேவையான கல்வியின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக' கல்வித் திருவிழா-2011 நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் டாக்டர் S.ஆபிதீன் எழுதி டைம் டிரஸ்ட் வெளியிடும் "சிகரங்கள் அழைக்கின்றன... சிறகுகளை விரியுங்கள்" உயர்கல்விக்கான வழிகாட்டுப் பாதை புத்தகத்தை முதுகுளத்தூர் பர்வீன் கிளினிக் Dr.S.U.ஹையர் நிஷா அஜீஸ் B.sc,M.B.B.S, வெளியிட இளையாங்குடி மேலப்பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி M.S.T.அப்துல் சத்தார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். அன்றைய முதல் அமர்வில் "அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்குவோம்" என்ற தலைப்பில் சமூக நீதி அறக்கட்டளையின் தலைவர் C.M.N.சலீம் ஆக்கப்பூர்வமான உரையை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் முதல் அமர்வில் "கல்வி - அனுபவங்களும்,அறிவுரைகளும்" என்ற தலைப்பில் சென்னை நியூ காலேஜின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் A.காதர் பாட்ஷா.M.A,M.B.A,M.Phil உரையாற்றினார்.

மூன்றாம் அமர்வில் த.மு.மு.கவின் மாநில செயலாளர் பேராசிரியர் J.ஹாஜா கனி M.A, M.Phil, Ph.D அவர்கள் "தலைமைப் பண்பு" என்ற தலைப்பில் மாணவர் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தெளிவுபடுத்தினார்.

நான்காம் அமர்வில் சென்னை HP Ltdன் Technology Consultant ஜனாபா N.K.சபீரா பேகம்,B.E அவர்கள் "படித்தேன் ஜெயித்தேன்" என்ற தலைப்பில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஐந்தாம் அமர்வில் மனோதத்துவ நிபுனர் Dr.M.S.N.முகைதீன் M.Sc,Ph.D உரையாற்றினார், அதே அமர்வில் தன்னோக்க பயிற்சியாளர் T.முஹம்மது பாட்ஷா M.Com,PGDCA "உனக்குள் உன்னைத்தேடி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இரண்டாம் நாளின் இறுதியாக காதர் பிச்சை தெரு - பி.எச் தெரு சந்திப்பில் மாலை 6:30 மணியளவில் பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது நிகழ்ச்சிக்கு இளையான்குடி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

"கல்வி இஸ்லாமிய பெண்களுக்கு அவசர அவசியம்" என்ற தலைப்பில் மதுரை மீனாட்சி கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜனாபா.A.K.தஸ்றீஃப் ஜஹான் M.A, Ph.D அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பொது நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் B.அப்துல் ஹமீது D.EEE அவர்கள் "கல்வியின் மாண்புகள்" என்ற தலைப்பில் இஸ்லாம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியும் இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய கல்வி நிலையையும் பற்றி பேருரையாற்றினார்.

இரண்டு நாள் கல்வித் திருவிழாவில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தூது.நிரூபர்-இளையான்குடி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இளையான்குடியில் கல்வியின் மகத்துவத்தை விளக்கும் விதமாக நடைபெற்ற கல்வித் திருவிழா"

கருத்துரையிடுக