15 ஜன., 2011

பிரேசிலில் கடும் மழை: வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 500 பேர் பலி

பிரேசில்லா,ஜன.1 பிரேசில் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் தொடர்ந்து கடும் மழை பெய்து வந்தது. இதையடுத்து, சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்தனர். பலநகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

பிரேசில் நாட்டில், 43 வருடங்களுக்குப் பிறகு இயற்கைப் பேரழிவில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதுவே முதல்முறை. கடந்த 1967-ம் ஆண்டு சா பாலோ மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தற்போது வெள்ளத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மலைப்பாங்கான பகுதிக்கு தப்பிச் சென்றனர். இதையடுத்து, அத்தகையப் பகுதிகளில் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப் பாதிப்பு காட்சிகள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்று நேரில் பார்வையிட்ட பிரேசில் அதிபர் ரூஃசெப் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரேசிலில் கடும் மழை: வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 500 பேர் பலி"

கருத்துரையிடுக