15 ஜன., 2011

காந்தஹாரில் அமெரிக்க ராணுவம் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பு 10 கோடி டாலர்

காபூல்,ஜன.15:ஆப்கானிஸ்தானில் தெற்கு மாகாணமான காந்தஹாரில் கடந்த 6 மாதங்களுக்கிடையே அமெரிக்க ராணுவம் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பு 10 கோடி டாலர் என அதிபரால் நியமிக்கப்பட்ட கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

முன்னர் இதுத் தொடர்பாக அமெரிக்க ராணுவம் நடத்திய பரிசோதனையில் 14 லடசம் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்தது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

காந்தஹாரில் 900க்கும் அதிகமான வீடுகள் அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலால் தகர்ந்து போயுள்ளன.

தோட்டங்கள், வீடுகள், முக்கிய சாலைகள் ஆகியன அமெரிக்காவின் குண்டுவீச்ச்சில் முற்றிலும் நாசமடைந்துள்ளதாக காந்தஹார் கவர்னர் தெரிவிக்கிறார்.

3 மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் அழிந்துள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் அமைந்துள்ள வீடுகளை பரிசோதித்த பிறகே இவ்வறிக்கையை தயார் செய்ததாக கமிஷனனின் தலைவர் முஹம்மது சித்தீக் அஸீஸ் தெரிவிக்கிறார்.

மாவட்ட கவர்னர்கள், உள்ளூர் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், போலீஸ் ஆகியோரை கொண்ட கமிஷன்தான் இந்த பரிசோதனையை நடத்தியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காந்தஹாரில் அமெரிக்க ராணுவம் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பு 10 கோடி டாலர்"

கருத்துரையிடுக