15 ஜன., 2011

அரசியல் நெருக்கடி:ஸாஅத் அல் ஹரீரி ஆதரவு தேடி துருக்கி சென்றார்

அங்காரா,ஜன.15:ஹிஸ்புல்லாஹ்வின் 11 அமைச்சர்கள் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருகடியை சமாளிக்க ஆதரவுத்தேடி லெபனான் பிரதமர் ஸாஅத் அல் ஹரீரி துருக்கிச் சென்றுள்ளார்.

லெபனானின் முன்னாள் அதிபர் ரஃபீக் ஹரீரியின் கொலையை விசாரிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயம் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் அமைப்பாகும். இத்தீர்ப்பாயம் ஹரீரி கொலையில் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தும் என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இதுக்குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவேண்டும் என ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்கள் கோரியிருந்தனர். ஆனால், இதனை ஹரீரி மறுத்துவிட்டார்.

அரசியல் நெருக்கடி தீரும் வரை பிரதமர் பதவியில் நீடிக்குமாறு லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் ஹரீரியிடம் உத்தரவிட்டார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஷி ஆகியோருடனும் ஸாஅத் அல் ஹரீரி கலந்தாலோசித்திருந்தார்.

புதிய அரசு உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அதிபர் துவக்கியுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் நபீஹ் பெரி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசியல் நெருக்கடி:ஸாஅத் அல் ஹரீரி ஆதரவு தேடி துருக்கி சென்றார்"

கருத்துரையிடுக