3 ஜன., 2011

கடந்த பத்தாண்டுகளில் கஷ்மீரில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7031

புதுடெல்லி,ஜன.3:கடந்த 10 ஆண்டுகளில் கஷ்மீரில் மோதல்களில் சாதாரண மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 7031 பேர் மரணமடைந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2001 ஆகஸ்ட் முதல் 2010 வரை ஜம்மு-கஷ்மீரில் 4812 சாதாரண மக்களும், 2219 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தகவல் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

கஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு, போராளிகளின் தாக்குதல், ஆயுதப் படையினர் போராளிகளுடன் நடத்தும் தாக்குதல் ஆகியன நடந்தேறியுள்ளன. இதன் பலனாக மரணிப்பதும், காயங்களை அனுபவிப்பதும் சாதாரண மக்களும், பாதுகாப்பு படையினருமாவர் என அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநிலத்தின் கடமையாகும். கஷ்மீரில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

தகவல் உரிமைச் சட்டத்தின்படி 2001 முதல் ஏற்பட்ட பேரிடர்களைக் குறித்த விபரங்களை அளிக்க அஸ்வின் ஸ்ரீவஸ்தவா விண்ணப்பித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கடந்த பத்தாண்டுகளில் கஷ்மீரில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7031"

கருத்துரையிடுக