3 ஜன., 2011

நோபல் பரிசு பெற்ற வெங்கிட்ராமன் மோடியை சந்திக்க மறுத்தாரா?

புதுடெல்லி,ஜன.3:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வரான நரேந்திர மோடியை காண்பதற்கு வேதியல் விஞ்ஞானத்திற்கு நோபல் பரிசுப் பெற்ற வெங்கிட்ராமன் ராமகிருஷ்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் வதேதராவில் மஹாராஜா ஸயோஜி ராவு பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வெங்கிட்ராமன் வருகைத் தந்திருந்தார். அவ்வேளையில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புவதாக வதேதரா மேயர் ஜோதி பாண்டே வழியாக மோடி அறிவித்த பொழுதிலும் மோடியை காண்பதற்கு தனக்கு விருப்பமில்லை என ராமகிருஷ்ணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெங்கிட்ராமனை சமாதானப்படுத்த பா.ஜ.க தலைவர்கள் முனைந்த பொழுதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

குஜராத் மாநிலத்தில் பிரபல விஞ்ஞானியும், பொது சேவகருமான பேராசிரியர் ஜெ.எஸ்.பந்தூக் வாலாவின் நண்பரும், மோடியை விமர்சிப்பவருமான சி.வி.ராமகிருஷ்ணன் தான் நோபல் பரிசுப்பெற்ற வெங்கிட்ராமனின் தந்தையாவார்.

குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்த பொழுது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து பந்தூக் வாலே பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவந்தார்.

குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்தபொழுது நாங்கள் என்ன அனுபவித்தோம் என்பதுக் குறித்து வெங்கிட்ராமனுக்கு பூரணமான அறிவும், தெளிவான பார்வையும் உண்டு என பந்தூக் வாலே தெரிவிக்கிறார்.

மோடி நடத்திய முஸ்லிம் இனப்படுகொலைக் குறித்து வெங்கிட்ராமனுக்கு தெளிவாக தெரியும். வெங்கிட்ராமன் மோடியை சந்திப்பதை தடுத்தது நான் என சிலர் கூறுகின்றனர். மோடியைக் குறித்து ஒரு வார்த்தைக்கூட நான் வெங்கிட்ராமனிடம் பேசவில்லை. இது அவருடையை தனிப்பட்ட முடிவு.

முஸ்லிம் இனப்படுகொலைக்காக மோடி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால், அவர் இதற்கு தயாரில்லை.

சில காந்தியவாதிகளை தவிர வேறு எவருக்கும் குஜராத்தில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் பச்சாதாபம் இல்லை என பந்தூக் வாலே தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நோபல் பரிசு பெற்ற வெங்கிட்ராமன் மோடியை சந்திக்க மறுத்தாரா?"

கருத்துரையிடுக