மன்னர் ஃபைஸல் விருதுக்கு தகுதியுடைய நபர்களை தேர்வுச் செய்வதற்காக சவூதி அரேபியாவின் விமானம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும், இளவரசருமான அமீர் சுல்தானின் தலைமையில் கூடிய கமிட்டி சமூக சேவகரும், கவிஞருமான அப்துல்லாஹ் பதாவியை இஸ்லாமிய சேவைக்கான விருதுக்கு தேர்வுச் செய்தது.
இஸ்லாமிய ஆய்வுக்குரிய விருது துருக்கியைச் சார்ந்த கலீல் இப்ராஹீமும், ஜோர்டானில் முஹம்மது அத்னான் பக்ஷித் அல் ஸய்யாபும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையில் சிறந்த பங்களிப்பை செய்த அமெரிக்காவின் பேராசிரியர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் மற்றும் ஜப்பான் நாட்டு பேராசிரியர் ஷின்யா யமனகாவும் தேர்வுச் செய்யப்பட்டனர்.
அறிவியல் துறையில் இம்முறை வேதியியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அமெரிக்க பேராசிரியர்கள் ஜார்ஜ் எம்.வைட்ஸைட் மற்றும் ரிச்சார்டு நீல் ஷேர் ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர். அரபு இலக்கியத்துறையில் எவரும் போதிய பங்களிப்பை செய்யாததால் இம்முறை அத்துறைக்கான விருது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தி:மாத்யமம்
1 கருத்துகள்: on "மலேசியா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் பதாவி உள்பட 7 பேருக்கு மன்னர் ஃபைஸல் விருது"
அப்துல்லாஹ் முன்னாள் அதிபர் அல்ல முன்னாள் பிரதமர் திருத்தி வாசிக்கவும்
கருத்துரையிடுக