மும்பை,ஜன.18:குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மலேகான் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெளியான சூழலில் 2006 மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் சிறைக் கைதிகளில் 9 பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மலேகான் குண்டுவெடிப்பிற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள்தான் தற்பொழுது சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகள் என்பது அஸிமானாந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் உறுதிச் செய்துள்ளது என ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிர்பந்தமாக பெறப்பட்ட வாக்குமூலத்தை தவிர தங்களுக்கெதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும், நிரபராதிகளான நாங்கள் கடந்த 4 வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளனர்.
MCOCA சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றம் இம்மாதம் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சி.பி.ஐயிடம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மலேகான்:முஸ்லிம் சிறைக் கைதிகள் 9 பேர் ஜாமீன் மனு"
கருத்துரையிடுக