ஜம்மு,ஜன.18:திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்ததைத் தொடர்ந்து காவல்நிலைய பொறுப்புக்குரிய அதிகாரிகள் மீது மாஜிஸ்ட்ரே விசாரணைக்கு ஜம்மு கஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட விஜய்குமார்(வயது 30) என்பவர் போலீஸ் காவலில் வைத்து மர்மமான முறையில் நேற்று முன்தினம் மரணித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சஞ்சய் சர்மா போலீஸ் நிலைய அதிகாரியான யஷ்பால் சர்மாவின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விஜய்குமாரின் மனைவிக்கு போலீஸ் துறையில் சிறப்பு பதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்நிலைய அதிகாரியை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டுமெனவும், அவருக்கெதிராக விசாரணை நடத்தவேண்டுமெனக் கோரி சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீரில் கஸ்டடி மரணம்:மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவு"
கருத்துரையிடுக