3 ஜன., 2011

இஸ்ரேலிய செக்போஸ்டில் சுட்டுக் கொல்லப்பட்ட ஃபலஸ்தீன இளைஞர்

ராமல்லா,ஜன.3:வடக்கு மேற்குகரை நகரமான நப்லூசிற்கு அருகே ஃபலஸ்தீன் இளைஞர் ஒருவரை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

ஹம்ரா செக் போஸ்டில் வைத்து மஹ்மூத் தரக்மெ என்ற 21 வயது ஃபலஸ்தீன இளைஞனை நேற்று காலை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றதாக ஃபலஸ்தீன் ரெட்கிரஸண்ட் சொசைட்டி
அறிவித்துள்ளது.

செக்போஸ்ட் வழியாக செல்வதற்கு அனுமதிக்காததால் அந்த இளைஞர் ராணுவத்தினருடன் தர்க்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து நிராயுதபாணியான அந்த இளைஞரை இஸ்ரேலிய வெறிப்பிடித்த ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றது.

இஸ்ரேலிய ராணுவம் பிரயோகித்த கண்ணீர் குண்டினால் ஜவ்ஹர் அபூரஹ்மா என்ற இளம்பெண் நேற்று முன்தினம் கொல்லப்பட்டிருந்தார்.

தடைச் செய்யப்பட்ட வேதிப்பொருளை கண்ணீர் குண்டில் இஸ்ரேல் ஃபலஸ்தீனர்கள் மீது பிரயோகித்து வருகிறது. இதற்கெதிராக எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஜவ்ஹரின் ஜனாஸா ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானபேர் கலந்துக் கொண்டனர்.

ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் பிரிவுச் சுவரை நீக்கவேண்டும் என அவர்கள் கோரினர். பிரிவினைச் சுவருக்கு பாதுகாவலாக நிற்கும் ராணுவத்தினர் பலமுறை கண்ணீர் குண்டை பிரயோகித்தனர் எனவும், அதன் விஷவாயுவை சுவாசித்துதான் ஜவ்ஹர் இறந்ததாகவும் அவருடைய உறவினர் ராதிப் அபூரஹ்மா தெரிவிக்கிறார்.

கண்ணீர் குண்டு உடல் மீது விழுந்து வெடித்ததில் ஜவ்ஹரின் சகோதரரான பாஸிம் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலிய செக்போஸ்டில் சுட்டுக் கொல்லப்பட்ட ஃபலஸ்தீன இளைஞர்"

கருத்துரையிடுக