2 ஜன., 2011

எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகும்வரை சட்டப்பேரவையை நடத்த விடமாட்டோம்: எச்.டி.குமாரசாமி

பெங்களூர்,ஜன.2:ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை நடத்தவிட மாட்டோம் என்று முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் சனிக்கிழமை ஆளுநர் பரத்வாஜை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், "சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முதல்வர் எடியூரப்பா பதவி விலகும் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை நடத்தவிட மாட்டோம்.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்த பாஜகவினரை பின்பற்றி, எடியூரப்பாவின் ராஜிநாமாவை கோரி போராட்டம் நடத்துவோம்.

எடியூரப்பா மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க வழக்கறிஞர்கள் அளித்துள்ள மனுவை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை கேட்டுக்கொண்டேன். தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக சொத்து சேர்த்ததை ஆதாரங்களோடு பகிரங்கப்படுத்திய பிறகும், எதுவும் நடக்காததுபோல எடியூரப்பா செயல்பட்டு வருகிறார்" என்றார்.
தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகும்வரை சட்டப்பேரவையை நடத்த விடமாட்டோம்: எச்.டி.குமாரசாமி"

கருத்துரையிடுக