6 ஜன., 2011

கே.ஜி.பாலகிருஷ்ணன்:விசாரணை கமிஷன் தேவை உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

புதுடெல்லி,ஜன.6:சட்டத்திற்கு புறம்பாக உறவினர்கள் சொத்து சேர்த்த விவகாரத்தைத் தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என கோரி பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சார்ந்த வழக்கறிஞரான மனோஹர்லால் சர்மா என்பவர் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் அவருடைய மருமகன் ஸ்ரீனிஜன், அவருடைய சகோதரன் பாஸ்கரன் ஆகியோர் பெருமளவில் சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஞாரக்கல் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீனிஜன் போட்டியிடும்போது வெறும் 25 ஆயிரம் ரூபாய்தான் அவருடைய வருமானம். குறைந்த காலக்கட்டத்தில் இது பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருக்கும் வேளையில்தான் இது நடந்துள்ளது. இவை சட்டத்திற்கு புறம்பாக குவிக்கப்பட்ட சொத்து என மத்திய அரசையும் இதில் பிரதிவாதியாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தபொழுது கே.ஜி.பாலகிருஷ்ணனின் பல தீர்ப்புகளும் மத்திய அரசுக்கு சார்பாகவே அமைந்திருந்தன. சத்தியம் போன்ற வழக்குகளில் இது பிரதிபலித்திருப்பதை காணலாம். வீரப்பமொய்லி போன்றவர்கள் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு உதவுவார்கள் என்பதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. ஆகையால் நீதி விசாரணைதான் தேவை எனக் கூறியுள்ள மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு எதிராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியவற்றையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கே.ஜி.பாலகிருஷ்ணன்:விசாரணை கமிஷன் தேவை உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்"

கருத்துரையிடுக