6 ஜன., 2011

அப்துல் நாஸர் மஃதனி:ஜாமீனு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பெங்களூர்,ஜன.6:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

எதிர்தரப்பு வாதத்தை தாக்கல் செய்வதற்கு அரசுத் தரப்பு மீண்டும் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து ஜாமீன் மனுவில் வாதம் கேட்பது ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று ஜாமீன் மனுவை பரிசீலனைக்கு எடுத்தபொழுது அரசு தரப்பு எதிர்வாதத்தை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் கோரியது. ஆனால், மஃதனியின் வழக்கறிஞர் இதனை எதிர்த்தார். எதிர்வாதம் சமர்ப்பிக்க இதுவரை இரண்டு தடவை அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது நியாயமல்ல என அவர் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வாதம் சமர்ப்பிப்பதற்காக மேலும் 10 தினங்களை அனுமதித்தது நீதிமன்றம். இது கடைசி வாய்ப்பு எனவும், இனிமேல் விசாரணையை ஒத்திவைக்க இயலாது எனவும் நீதிமன்றம் அரசு தரப்பிடம் கூறியது. ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 16-ஆம் தேதி நடைபெறும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி:ஜாமீனு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு"

கருத்துரையிடுக