13 ஜன., 2011

ஜின்னா மதசார்பற்றவாதி - மீண்டும் கூறுகிறார் அத்வானி

டெல்லி,ஜன.13:முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மதசார்பற்ற நாட்டைத்தான் முஹம்மது அலி ஜின்னா கனவுக் கண்டார் என அத்வானி தெரிவித்துள்ளார்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் வைத்து நான் இதனைத் தான் கூறினேன்" என அவர் தெரிவித்தார்.

எம்.ஜே.அக்பர் எழுதிய டின்டர் பாக்ஸ்-தி பாஸ்ட் அண்ட் ஃப்யூச்சர் ஆஃப் பாகிஸ்தான் என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் அவர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு எல்.கே.அத்வானி பா.ஜ.கவின் தேசிய தலைவராக பதவி வகித்தபொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் ஜின்னாவை மதசார்பற்ற வாதி என அவருடைய கல்லறையில் வைத்து புகழாரம் சூட்டியதற்கு பா.ஜ.க மற்று ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பா.ஜ.க தலைவர் பதவியை ராஜினாமாச்செய்ய நேர்ந்தது.

பின்னர் 2007 ஆம் ஆண்டு அத்வானியின் மீதான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டார்.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அத்வானி, ஜின்னா மதசார்பற்றவர் எனவும், பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு காரணம், சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்கும், இரு நாட்டுக் கொள்கையை முன்வைத்த அபுல் அஃலா மவ்தூதி போன்றோர் ஆவர் என குற்றஞ்சாட்டினார்.

மவ்தூதியின் ஆதரவாளர்களின் கொள்கைகளை ஜின்னாவின் ஆதரவாளர்கள் தோல்வியடைச் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையுடைய நவீன நாடாக மாறும் என அக்பர் தனது நூலில் குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டினார் அத்வானி.

இந்தியாவில் மனித இனத்திற்கெதிரான கொள்கையை அறிமுகப்படுத்தி, அப்பாவி மக்களை குண்டுவெடிப்புகள் மூலமாகவும், இனக்கலவரங்கள் மூலமாகவும் கொன்றொழித்து வரும் பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் ஊறிய அத்வானி, 1989 ஆம் ஆண்டு நடத்திய ரதயாத்திரையில் ஏராளமான அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு காரணமானவராவார்.

1992 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய குற்றவாளிகளில் இவரும் ஒருவர் என லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் இவர், மனிதநேயமிக்க மார்க்கமான இஸ்லாத்தின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற அறிஞரான அபுல் அஃலா மவ்தூதியை குறைசொல்ல என்ன தகுதி என்பது நடுநிலையாளர்களின் மனதில் எழும் கேள்வியாகும்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜின்னா மதசார்பற்றவாதி - மீண்டும் கூறுகிறார் அத்வானி"

கருத்துரையிடுக