13 ஜன., 2011

ஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அறிவிப்பு

துபாய்,ஜன.13:ஐக்கிய அரபு அமீரக நாட்டின் எமிரேட்ஸ்களில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட தேர்வில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.

முன்னர் வழக்கதிலிருந்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் முதல் கட்டமாக போக்குவரத்து அடையாள தேர்வு(சிக்னல் டெஸ்ட்) நடத்தப்படும். தற்பொழுது அதற்கு பதிலாக 35 கேள்விகள் அடங்கிய எழுத்துத் தேர்வு நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதல் கட்டமாக விண்ணப்பதாரர் இந்த எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.

துபாய் எமிரேட்ஸின் ஐந்து ஓட்டுநர் மையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை உரிம முகமைத் தலைவர் அஹ்மத் ஹாஷிம் பெஹ்ருஸைன் தெரிவித்தார்.

விண்ணப்பதாரரின் அறிவும், சாலை அடையாளங்கள்(சிக்னல்) குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல பாதுகாப்பாக எவ்வாறு வாகனத்தை ஓட்டுவது, சாலை விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதுக் குறித்த கேள்விகளும் எழுத்துத் தேர்வில் இடம்பெறும் என பெஹ்ருஸைன் தெரிவித்துள்ளார்.

சாலை தேர்விற்கான பதிவு செய்வதற்கான வசதி துபாயின் ஐந்து ஓட்டுநர் மையங்களிலும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு ஆர்.டி.எ(துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை இணையதளம்) வெப்ஸைட் மூலமாகவும், இலவச சேவை எண் மூலமாகவும்(டோல் ஃப்ரீ நம்பர்) பதிவுச்செய்ய வசதிச் செய்யப்பட்டுள்ளது என பெஹ்ருஸைன் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அறிவிப்பு"

கருத்துரையிடுக