30 ஜன., 2011

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபத் உயர்நீதிமன்ற சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து டி.என்.டி.ஜே கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜன.30:அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாப்ரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச் வழங்கிய அநியாய தீர்ப்பைக் கண்டித்தும் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தாமாக கையிலெடுத்து விசாரிக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை மற்றும் மதுரையில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவ்வமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில்; "நீதிமன்றங்களை நாம் மதிப்பது அவர்கள் சட்டப்படி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான். அந்த நபர்களுக்காக அல்ல. சட்டத்தின்படி அளிக்கப்படாத இந்தத் தீர்ப்பை ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி உலக முஸ்லிம் சமுதாயமும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சட்ட விரோதத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் சமுதாயத்தின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அநீதியான தீர்ப்பை மறு பரிசீனைக்கு தானாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." என்றார்.

சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் கண்டன உரையாற்றினார் இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபத் உயர்நீதிமன்ற சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து டி.என்.டி.ஜே கண்டன ஆர்ப்பாட்டம்"

Ansari சொன்னது…

இந்த அநியாய தீர்ப்பை கண்டிக்க ஒரு வீரியமிக்க போராட்ட களம் தேவைப்பட்டது. அதை சரியான முறையில் நடத்திக்காட்டிய TNTJ வை பாராட்டுகிறேன்.

புதுவை ஷேக் அன்சாரி
அல்கோபர்

கருத்துரையிடுக