30 ஜன., 2011

அல்ஜஸீராவுக்கு எகிப்தில் தடை

கெய்ரோ,ஜன.30:எகிப்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி செயல்பட அந்நாட்டு சர்வாதிகார அரசு தடைபோட்டுள்ளது.

எகிப்தில் கடந்த நான்கு தினங்களாக ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடுமையான மக்கள் திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் நடைபெற்றுவரும் மக்கள் திரட்ட போராட்டங்களை அல்ஜஸீரா தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது.

அல்ஜஸீராவினால் எங்கே தங்கள் நாடுகளிலும் புரட்சி வெடித்துவிடுமோ என பல அரபு நாடுகள் அச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு எகிப்திய அரசு இன்று தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை MENA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த உத்தரவை எகிப்தின் வெளி உலக தகவல் தொடர்பு அமைச்சர் அனஸ் அல்ஃபிக்கி பிறப்பித்துள்ளார். அல் ஃபிக்கி தனது உத்தரவில், "அல்ஜஸீராவின் அனைத்து நடவடிக்கைகளும் எகிப்திய குடியரசில் நிறுத்தப்பட வேண்டும். மேலும் அதன் உரிமங்கள் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பணியாளர்களிடமிருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்(press cards) வாபஸ் பெறப்படுகின்றன" இவ்வாறு கூறியுள்ளார்.
செய்தி:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அல்ஜஸீராவுக்கு எகிப்தில் தடை"

கருத்துரையிடுக