17 ஜன., 2011

சுனில்ஜோஷி:கொன்றது ஆர்.எஸ்.எஸ், உறவினர்களை பறிகொடுத்தது முஸ்லிம் குடும்பம்

புதுடெல்லி,ஜன.17:ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் பயங்கரவாதியுமான சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்தான் என்ற உண்மை வெளியானபோது மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் ஒரு முஸ்லிம் குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கையை கழிக்கிறது.

சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதற்கு பிறகு தேவாஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுதர்கேதாவில் முஸ்லிம் வீடுகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வீடுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து இரண்டு பேரை தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்துள்ளனர்.

ஷெராஜ் பீவியின் கணவர் 65 வயதான ரஷீதும், 27 வயதான மகன் ஜலீலும் கொலைச் செய்யப்பட்டவர்களாவர். இதர மகன்களான ராஷிஷிற்கும், அஷ்பாக்கிற்கும் குண்டடிப்பட்ட போதும் அவர்கள் மரணிக்கவில்லை. மகளோ உடல் பாதி வெந்துபோன நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

ஜோஷியை கொலைச் செய்ததற்கு பிறகு அதனை காரணங்காட்டி முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்கிய சம்பவம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

2007 டிசம்பர் 29-ஆம் தேதி ஜோஷி கொலைச் செய்யப்பட்ட அடுத்த நாளில் சுதர்கேதாவில் தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஹிந்து வெறியர்கள் கோபத்துடன் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். "எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" என வெறிப்பிடித்த கூட்டம் கத்தியதாக ஷெராஜ்பீ நினைவுக் கூறுகிறார்.

"எனது வீட்டை சுற்றிவளைத்த ஹிந்துத்துவ வெறியர்களிடம், ஏன் எங்களை நீங்கள் தாக்குகின்றீர்கள்? என நான் கேட்டேன். பதில் கூறாத அவர்கள் எவரும் வீட்டிலிருந்து வெளியேறி விடாதவாறு வீட்டின் வெளியே கதவுகளை மூடினர்." ஹிந்துத்துவ வெறியர்களின் கூட்டத்தை வழிநடத்தியவாறு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வருவதை ரஷீத் வீட்டிற்கு வெளியேயிருந்து பார்த்துள்ளார்.

ஹிந்துத்துவ வெறியர்களில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். வீட்டிற்குள் சாப்பிட்டுக்கொ ண்டிருந்த ஜலீலை வெளியே இழுத்துச்சென்று தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனை தடுப்பதற்கு சென்ற அஷ்பாக்கையும், ராஷிஷையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ரஷீதின் இளைய சகோதரி ஐந்து வயது அஸ்மாவிற்கு உடலில் காயமேற்பட்டது. 90 சதவீதம் உடல் கருகிய ஜலீல் பதினொன்று தினங்களாக எம்.ஒய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கடும் வேதனையை அனுபவித்து மரணித்துள்ளார்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்டு மறுதினம் ஹிந்துத்துவ அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. முழு அடைப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

ஜோஷியைக் கொலைச் செய்தது 'சிமி' அமைப்புதான் என போலீஸ் அறிவித்துள்ளது. இது ஹிந்துத்துவ வெறியர்களுக்கு மேலும் வெறியைத் தூண்டியுள்ளது. தாக்குதல்களுக்கெதிராக முஸ்லிம்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு பதிவுச் செய்தபோதும் போலீசாரும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் இணைந்து வழக்கை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

பான்வர்சிங், மஹிபால் சிங், ஓம்பிரகாஷ், ஜஸ்வந்த்சிங், ராஜ்பால் சிங் ஆகியோர்தான் தாக்குதலை நடத்தி முஸ்லிம்களைக் கொலைச் செய்த குற்றவாளிகள். வழக்கை வாபஸ் பெறாமல் உறுதியாக இருந்ததால் குற்றவாளிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி தேவாஸ் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. வழக்கு தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

குற்றவாளிகளின் அச்சுறுத்தலால ஷெராஜ்பீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுனில்ஜோஷி:கொன்றது ஆர்.எஸ்.எஸ், உறவினர்களை பறிகொடுத்தது முஸ்லிம் குடும்பம்"

கருத்துரையிடுக