17 ஜன., 2011

சம்ஜோதா குண்டுவெடிப்பு விசாரணை முடிவுற்றால் விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் - இந்தியா

புதுடெல்லி,ஜன.17:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை முடிவுற்றால் விபரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைப்போம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏராளமான பாகிஸ்தான் நாட்டவர்கள் கொல்லப்பட்டதுக் குறித்த பாகிஸ்தான் உணர்வை புரிந்துக் கொள்கிறோம் என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.

விசாரணை இன்னும் முடியவில்லை, குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டால் உடனடியாக விசாரணைக் குறித்த விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

2007 பிப்ரவரி 17-ஆம் தேதி நடுஇரவில் ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சென்றுக் கொண்டிருந்தபொழுது குண்டுவெடித்தது. "இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் நானும், எனது ஹிந்துத்துவா கூட்டாளிகளும்தான்" என ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா குண்டுவெடிப்பு விசாரணை முடிவுற்றால் விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் - இந்தியா"

கருத்துரையிடுக