19 ஜன., 2011

ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிடம் என்.ஐ.ஏ விசாரணை

புதுடெல்லி,ஜன:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ-யால் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருந்தார்.

அதில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கு சுனில் ஜோஷிதான் முக்கிய சூத்திரதாரி என தெரிவித்திருந்தார். சுனில்ஜோஷி கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். ரகசியம் கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்தான் சுனில் ஜோஷியை கொலைச் செய்தனர் என கருதப்படுகிறது.

இந்நிலையில், 2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2003 ஆம் ஆண்டு சுனில்ஜோஷியை தனக்கு அறிமுகப்படுத்தினார் என அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்ததைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜன்சி முடிவுச் செய்துள்ளது.

இவ்விசாரணையின் போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங்கின் பங்கினைக் குறித்து என்.ஐ.ஏ கேள்வி எழுப்பும் எனத் தெரிகிறது.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிடம் என்.ஐ.ஏ விசாரணை"

கருத்துரையிடுக