4 ஜன., 2011

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா

மும்பை,ஜன.4:ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலுடன் தொடர்புடைய மஹாராஷ்ட்ரா மனித உரிமை கமிஷன் உறுப்பினரான சுபாஷ் லல்லா ராஜினாமாச் செய்துள்ளார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான லல்லாவின் உறவினருக்கு விவாதத்திற்கிடமான ஆதர்ஷ் ஹவுஸிங் சொசைட்டியில் ப்ளாட் உள்ளது. லல்லா நேற்று ஆளுநர் சங்கரநாராயணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதர்ஷ் வீட்டுவசதி தொடர்பான ஃபைல் மாநில அரசின் பரிசீலனையில் இருந்தபொழுது லல்லா முதல் அமைச்சரின் செயலாளராக பணியாற்றி வந்தார். ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் லல்லா ராஜினாமாச் செய்யும் முதல் அதிகாரியாவார்.

மனித உரிமை கமிஷனின் கண்ணியத்தை பாதுகாப்பதற்காக தான் ராஜினாமாச் செய்வதாக லல்லா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் லல்லாவிடமும், இன்னொரு அதிகாரியான ராமானந்த் திவாரியிடமும் ராஜினாமாச் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது.

முன்னாள் நகர வளர்ச்சித்துறை செயலாளரான திவாரி மாநில தகவல் உரிமை கமிஷனராக இருந்துவருகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா"

கருத்துரையிடுக