26 ஜன., 2011

மதமாற்றம் தொடர்பான விமர்சனத்தில் திருத்தம் செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,ஜன.26:கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலைவழக்கில் தீர்ப்பு அளிக்கும் வேளையில் மதமாற்றம் தொடர்பாக வெளியிட்ட விமர்சனத்தில் உச்சநீதிமன்றம் திருத்தம் செய்தது.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் படுகொலை வழக்கில் தாராசிங்கிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிச்செய்த தீர்ப்பில் தூண்டுதல் மூலமாகவோ, நிர்பந்தித்தோ, தவறாக புரியவைத்தோ மற்றொரு நபரின் நம்பிக்கையில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

ஒரு மதம் மற்றொரு மதத்தைவிட சிறந்தது எனக் கூறுவது சரியல்ல என பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது விமர்சனத்தை வெளியிட்டிருந்தது. இக்கருத்தை திருத்தம் செய்த உச்சநீதிமன்றம் தற்பொழுது மற்றொரு நபரின் நம்பிக்கையில் தலையிடுவதை ஒருதரத்திலும் நியாயப்படுத்த முடியாது என கூறியுள்ளது.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொடூரமான முறையில் தாராசிங் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியினால் படுகொலைச் செய்யப்பட்டனர். சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இத்தீர்ப்பில் உயர்நீதிமன்றம் அளித்த குறைந்த பட்ச தண்டனையான ஆயுள்தண்டனையை உறுதிச்செய்த உச்சநீதிமன்றம் மீண்டும் தனது ஹிந்துத்துவா மனசாட்சியின்படி, தீர்ப்பு அளித்தபோது தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பை கிளப்பியிருந்தன.

கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவரது இரண்டு குழந்தைகளையும் எரித்துக் கொல்வதற்கு ஹிந்துத்துவா பயங்கரவாதி தாராசிங்கினை தூண்டியது மதத்துடனான அர்ப்பண மனோபாவம் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதமாற்றம் தொடர்பான விமர்சனத்தில் திருத்தம் செய்தது உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக