26 ஜன., 2011

மாஸ்கோ குண்டுவெடிப்பு:பின்னணியில் கறுப்பு விதவைகளா?

மாஸ்கோ,ஜன.26:ரஷ்ய தலைநகரான மாஸ்கோ டோமோடிடோவோ விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் கறுப்பு விதவைகள் என்ற அமைப்பு செயல்பட்டுள்ளதா? என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கையில் பையுடன் வந்த கறுப்பு ஆடையணிந்த பெண்மணி ஒருவர் இந்த குண்டுவெடிப்பை நடத்தினார் என நேரடி சாட்சியை மேற்கோள்காட்டுவதாக கூறி சீன பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாஸ்கோ மெட்ரோ ரெயில் குண்டுவெடிப்பிலும் கறுப்பு விதவை அமைப்பிற்கு பங்கிருப்பதாக ரஷ்ய போலீஸ் தெரிவித்திருந்தது.

காக்கஸஸ் பகுதியில் கொல்லப்பட்ட போராளிகளின் மனைவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் Black widows கறுப்பு விதவைகள். இவ்வமைப்பு தாக்குதல் நடத்துவதுக் குறித்து தகவல் கிடைத்திருந்தது என பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வியில் பதிவான நான்கு ஆண்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளதாக ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன் தினம் டோமோடிடோவோ விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டு 180 பேருக்கு காயமேற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து டோமோடிடோவோ செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைச் செய்யப்பட்டிருந்தது. மேலும் ரஷ்யாவின் இதர விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாஸ்கோ குண்டுவெடிப்பு:பின்னணியில் கறுப்பு விதவைகளா?"

கருத்துரையிடுக