பெய்ரூத்,ஜன:லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் பிரதமர் வேட்பாளரான நஜீப் மிகாத்திக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து தற்காலிக பிரதமரான ஸஅத் ஹரீரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட மிகாத்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றிருந்தார். மிகாத்திக்கு 68 பேர்களின் ஆதரவு கிடைத்தபொழுது ஹரீரிக்கு 60 பேர்களின் ஆதரவே கிடைத்தது.
ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் புதிய அரசு உருவாக இருக்கும் சூழலில் ஹரீரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். வன்முறையை கைவிடுமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் ஹரீரி வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் ஊடக பணியாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனத்தை தீவைத்துக் கொளுத்திய வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி அடித்து உதைத்தனர். தலைநகரில் ராணுவ டாங்குகள் வருகைத் தந்துள்ளன.
55 வயதான மிகாத்தி கடந்த 2005 ஆம் ஆண்டு சிறிதுகாலம் பிரதமராக பதவி வகித்திருந்தார். தங்களுடைய பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மையுடன் தேர்வுச் செய்யப்பட்டால் அரசு உருவாக்கத்தில் எதிர் கட்சிகளையும் உட்படுத்துவோம் என ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1 கருத்துகள்: on "ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெரும்பான்மை: ஸஅத் ஹரீரியின் ஆதரவாளர்கள் வன்முறை"
லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் புதிய அரசு உருவாக இருக்கும்
கருத்துரையிடுக