கெய்ரோ,ஜன.4:கிறிஸ்தவ சர்ச்சில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்திருக்கும் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவிலும், கெய்ரோவிலும் கிறிஸ்தவர்களும், போலீசாரும் மோதலில் ஈடுபட்டனர்.
தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென கோரி கிறிஸ்தவர்கள் கெய்ரோவிலும்,அலெக்ஸாண்ட்ரியாவிலும் நடத்திய கண்டனப் போராட்டங்கள் வன்முறையில் முடிந்தது.
சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பிற்கு வருத்தம் தெரிவிக்க ஆர்த்தோடக்ஸ் பிஷப் ஸெனூதாவை காண்பதற்காக சர்ச்சிற்கு வந்த அமைச்சர்களை ஒரு கும்பல் சுற்றிவளைத்து கேள்விகளை கேட்டது. ஒரு காரின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல முயற்சித்த போலீசாருடன் கிறிஸ்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இன்னொரிடத்தில் அரசு நிறுவனங்களும்,வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாயின. அதேவேளையில், 21 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டு வெடிப்பைக் குறித்த விசாரணையை எகிப்து போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது. ஏராளமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால்,இவர்களுக்கு நேரடியான தொடர்பு இல்லை என போலீஸ் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவ சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எகிப்து:கிறிஸ்தவர்கள்-போலீசார் மோதல்"
கருத்துரையிடுக