தெஹ்ரான்,ஜன:வளைகுடா நாடுகளில் மேற்கத்திய நாடுகளுக்காக உளவு வேலைப் பார்த்த இரண்டு ஆளில்லா விமானங்களை ஈரானின் புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மூத்த கமாண்டர் அறிவித்துள்ளார்.
கடந்த சில காலங்களுக்கிடையே பல விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஈரான் புரட்சிப் படையின் கமாண்டர் அமீர் அலி ஹாஜிஸாதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. முதன்முறையாக இத்தகவலை வெளியிடுவதாக அவர் தெரிவிக்கிறார்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்தான் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில வேளைகளில் ஈரானின் எல்லையிலும் அத்துமீறப்படுகிறது என ஹாஜிஸாதே தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மேற்கத்திய நாடுகளின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்"
கருத்துரையிடுக