15 ஜன., 2011

இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இடம்பெறும் : உலக வங்கி

ஜன.15: 2011ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியிலேயே இடம்பெறும் என உலக வங்கி கூறியுள்ளது. உலகப் பொருளாதாரம் மிதமான வளர்ச்சி வேகத்தையே இந்த ஆண்டில் பதிவு செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியா போன்றவை உலகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பினை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டில் 3.3 வீதமாக அமையும் எனவும் கடந்த ஆண்டில் சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 ஆகக் காணப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், இந்த பொருளாதார வளர்ச்சி வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், சில நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 வீதத்தை எட்டும் எனவும், அபிவிருத்தி அடைந்த செல்வந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2.4 வீதமாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதாரத்திற்கு சாதகமான உள்ளீடுகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இடம்பெறும் : உலக வங்கி"

கருத்துரையிடுக